2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

4 தலைமை நீதிபதிகள் உள்பட 10 பேர் பணியிடமாற்றம்

பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றத்தின் 4 தலைமை நீதிபதிகள் மற்றும் 6 நீதிபதிகளை பணியிடமாற்றம் செய்து மத்திய சட்டத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :31 டிசம்பர் 2020, 3:03 pm

DIN

பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றத்தின் 4 தலைமை நீதிபதிகள் மற்றும் 6 நீதிபதிகளை பணியிடமாற்றம் செய்து மத்திய சட்டத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு, உயர்நீதிமன்ற நீதிபதிகளை பணியிடமாற்றம் செய்ய குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்திருந்தது.

இதையடுத்து, கொலீஜியம் குழுவின் கோரிக்கைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பணியிடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதிகள்:

நீதிபதிகள் பெயர்பணிபுரிந்த உயர்நீதிமன்றம்பணியிடம் மாறிய உயர்நீதிமன்றம்
ராகவேந்திரா சிங், தலைமை நீதிபதிதெலங்கானாஉத்தரகண்ட்
ஜிதேந்தர் குமார் மகேஷ்வரி, தலைமை நீதிபதிஆந்திரம்சீக்கிம்
அருப் குமார் கோசுவாமி, தலைமை நீதிபதிசீக்கிம்ஆந்திரம்
மொஹமத் ரஃபிக், தலைமை நீதிபதிஒடிசாமத்திய பிரதேசம்
சஞ்சய் யாதவ், நீதிபதிமத்திய பிரதேசம்அலகாபாத்
ராஜேஷ் பிந்தால், நீதிபதிஜம்மு-காஷ்மீர்கொல்கத்தா
வினீத் கோதாரி, நீதிபதிசென்னைகுஜராத்
ஜோய்மல்யா பக்ஜி, நீதிபதிகொல்கத்தாஆந்திரம்
சதீஸ் சந்திர சர்மா, நீதிபதிமத்திய பிரதேசம்கர்நாடகம்
ரவி விஜய்குமார் மலிமாத், நீதிபதிஉத்தரகண்ட்ஹிமாச்சலப் பிரதேசம்

இதற்குமுன், கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சஞ்சீவ் பானா்ஜியை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.