சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மதுரை அருகே கார் - லாரி மோதல்: கட்டடத் தொழிலாளி பலி; 11 பேர் படுகாயம்

திருமங்கலம் அருகே கட்டடத் தொழிலாளர்களை ஏற்றி வந்த டாடா சுமோ மற்றும் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

News image
மதுரை அருகே கார் - லாரி மோதிக்கொண்டதில் சிதைந்த டாடா சுமோ
Updated On :2 ஜூலை 2020, 6:07 am

DIN


திருமங்கலம் அருகே கட்டடத் தொழிலாளர்களை ஏற்றி வந்த டாடா சுமோ மற்றும் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

திருமங்கலத்தை அடுத்த கல்லணை பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் 12 பேர் டாடா சுமோ காரில் கல்லணையிலிருந்து திருமங்கலம் நோக்கி வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தனர். அப்போது கல்லணை விலக்கு அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே கட்டடத் தொழிலாளி ராஜு(50) உயிரிழந்தார். மேலும் டாட்டா சுமோவில் சென்ற கல்லணை பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளிகள் தெய்வானை, மகேஸ்வரி, அழகு, பாகத்தால், முத்துப்பிள்ளை, முத்துமாரி, மாயாண்டி, கருப்பையா உள்ளிட்ட 11 பேர் படுகாயமடைந்தனர். 

காயமடைந்த அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

விபத்து குறித்து திருமங்கலம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.