பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பண்ருட்டியில் காதல் திருமணம் செய்த கணவன் மனைவி தற்கொலை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை புதிய கடலூர் ரோடு எஸ்.கே.வி.நகரில் வசித்து வருபவர் சிவக்குமார் (31) இவர் சிற்ப வேலை செய்து வருகிறார்.

Published On :


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை புதிய கடலூர் ரோடு எஸ்.கே.வி.நகரில் வசித்து வருபவர் சிவக்குமார் (31) இவர் சிற்ப வேலை செய்து வருகிறார்.

கரோனா பொது முடக்கத்தால் வேலை கிடைக்காததால் கீரை வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை இவரது மனைவி சரண்யா(24) கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து  வீட்டிற்குள் சென்ற சரண்யா புடவை துணியால் தூக்கு போட்டு கொண்டார். அலறல் சத்தம் கேட்டு ஓடி பார்த்த கணவன் சிவக்குமார் மனைவியை மீட்டு பண்ருட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சரண்யா இறந்த விட்டதாக கூறினர். இதனால் செய்வதறியாது திகைத்த கணவன் சிவக்குமார் பயத்தில் அவரும் சரண்யா தூக்கில் தொங்கிய அதே இடத்தில் பனியன் துணியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பண்ருட்டி காவல் ஆய்வாளர் அம்பேத்கார், பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர்-மனைவி தற்கொலை குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தற்கொலை செய்து இறந்துபோன சிவக்குமார் - சரண்யா தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.