இந்நிலையில், ஈரோடு மாநகர் பகுதியில் புதன்கிழமை மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் இடியுடன் கனமழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய பகுதியில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதேபோல் வ.உ.சி பூங்காவில் செயல்பட்டு வரும் நேதாஜி மார்க்கெட்டிலும் மழைநீர் தேங்கி சேறும் சகதியாக உள்ளதால் வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டனர். சரக்கு ஏற்றி வந்த சரக்கு வாகனங்கள் சில சகதியில் சிக்கியன. மார்கெட் முழுவதும் சேரும் சகதியுமாக காட்சி அளிப்பதால் வியாழக்கிழமை காலை மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு காய்கனிகளை வாங்கி சென்றனர். புதன்கிழமையை விட வியாழக்கிழமை மார்க்கெட்டில் மக்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது.