ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி

108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா தொடக்க கொடியேற்று விழா பக்தர்களின்றி கொடியேற்றப்பட்டது. 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்


ஸ்ரீவில்லிபுத்தூர்: 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா தொடக்க கொடியேற்று விழா பக்தர்களின்றி கொடியேற்றப்பட்டது. 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருப்பது ஆண்டாள் கோயில் இக் கோவிலில் 108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தன்று வெகுவிமர்சையாக தேரோட்டம் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். 10 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தமிழகம், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து ஆண்டாளை தரிசனம் செய்சு செல்வார்கள். 

இந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்றின் காரணமாக இதுவரை எந்த ஆண்டும் இல்லாத வகையில் பக்தர்களின்றி நடைபெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. வரும் 24-ஆம் தேதி கோவில் வளாகத்திற்குள் தங்கத் தேரோட்டம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுவும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 

வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com