நாமக்கல்லில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் வரைவு மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


நாமக்கல்: மத்திய அரசின் வரைவு மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் இலவச மின்சார உரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.து.செல்வராஜ் தலைமை வகித்தார்.
இதில் மின்சாரத்தை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் சுத்த பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.
கைத்தறி, விசைத்தறி மற்றும் வீடுகளுக்கு சலுகை கட்டண மின்சாரம் தொடரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.பெருமாள், ஏஐடியூசி மாவட்ட துணைத்தலைவர் தம்பி ராஜா மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் விவசாயிகள், பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...