47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருப்பூர் அருகே விவசாயிகள் கருப்புக் கொடி போராட்டம்

மத்திய அரசின் மின்சார சட்ட திருத்தத்தைக் கண்டித்து திருப்பூரை அடுத்த இடுவாயில் விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக் கொடி போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

News image
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
Updated On :27 ஜூலை 2020, 6:17 am

DIN

மத்திய அரசின் மின்சார சட்ட திருத்தத்தைக் கண்டித்து திருப்பூரை அடுத்த இடுவாயில் விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக் கொடி போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி ஆகியன சார்பில் பம்புசெட்டுகளுக்கான விலையில்லா மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி திருப்பூர் அடுத்த இடுவாய் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கருப்புக் கொடி போராட்டத்துக்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம் தலைமையும், இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் முன்னிலையும் வகித்தனர்.

இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில், "மின்சார சட்டதிருத்தம் 2020 ஐ மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். விவசாய வர்த்தக சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். கரோனா காலத்தில் அவசர சட்டம் போடக்கூடாது." என்று கோஷங்களை எழுப்பினர்.

இதில்,கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ஈஸ்வரன், கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதே போல திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் சார்பில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.