ரஜினிகாந்த் பாராட்டு கடிதத்துக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டிவிட்டரில் தமிழில் பதில்
நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு கடிதத்திற்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் தமிழில் பதில் அளித்துள்ளார்.


செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குநரை நியமனம் செய்தது பாராட்டத்தக்கது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும், பேராசிரியர் சந்திரசேகரனை இயக்குநராக நியமித்ததற்கும் நன்றி தெரிவித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு, நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியிருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு கடிதத்திற்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் தமிழில் பதில் அளித்துள்ளார்.

அதில், தமிழ் மொழியினை மேலும் வலுப்படுத்தும் அக்கறையுடன் பணிபுரிந்து வருகிறது என்பதை உங்களுக்கு உறுதிபடுத்துகிறேன்.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களது திறமையான தலைமையில், நம் பாரத தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க உறுதி கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...