டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

பேராவூரணி அருகே விஷம் கொடுத்து இரு குழந்தைகள் பலி, தந்தை கவலைக்கிடம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே அருகே விஷம் கொடுத்ததில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் குழந்தைகளின் தந்தை சிகிச்சை பெற்று வருகிறார். 

Published On :


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே அருகே விஷம் கொடுத்ததில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் குழந்தைகளின் தந்தை சிகிச்சை பெற்று வருகிறார். 

பேராவூரணி அருகிலுள்ள இரண்டாம்புளிக்காட்டைச் சேர்ந்தவர் கதிரவன் (30) கூலி தொழிலாளி. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ் மங்களத்தை சேர்ந்த சுகன்யா(26) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு வருனிகாஸ்ரீ(7), ஜனனிகாஸ்ரீ(5) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவியிடையே ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக  கோபித்துக்கொண்டு கடந்த ஒரு வருடமாக ஆர்.எஸ் மங்களத்தில் உள்ள தாய் வீட்டில் சுகன்யா இருந்து வருகிறார். 

கரோனா பொதுமுடக்கத்தில் குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்ட கதிரவன் கஷ்டம் தாங்காமல் கடந்த 4 ஆம் தேதி எலுமிச்சை சாதத்தில் விஷத்தை கலந்து இரண்டு குழத்தைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார். ஆபத்தான நிலையில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனர். கதிரவன் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இச்  சம்பவம் குறித்து சேதுபாவாசத்திரம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.