ஈரோடு மாவட்டத்தில் அணைப் பகுதியில் பரவலாக பெய்த மழை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும்நிலையில், தென்மேற்கு பருவமழை காரணமாக


ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும்நிலையில், தென்மேற்கு பருவமழை காரணமாக ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் சாரல் மழை பெய்துள்ளது. ஈரோடு மாநகர் பகுதியில் மதியம் 3.30 முதல் சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதைப்போன்று மாவட்டத்தில் அணைப்பகுதியான குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இங்கு அதிகபட்சமாக 43.2 மி. மீ மழை பதிவாகி இருந்தது. இதைப்போன்று வரட்டுப்பள்ளம் அணை பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. பவானிசாகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.
ஈரோட்டில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:
குண்டேரிபள்ளம் 43. 2,
வரட்டுப்பள்ளம் 11.5,
ஈரோடு 6,
பவானிசாகர் 5.2 ,
அம்மாபேட்டை 2.8,
சென்னிமலை 2,
பெருந்துறை 1.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...