2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

மருத்துவச் செலவுக்குச் சேமித்த பணத்தில் 1000 முகக் கவசங்களை ஆட்சியரிடம் வழங்கிய பார்வையற்றோர் பள்ளிச் சிறுவன்

மருத்துவ செலவிற்காக வைத்திருந்த தொகையை பார்வையற்ற சிறுவன் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் முகககவசங்கள் வாங்கி மாவட்ட ஆட்சியரிடம் 

News image
Updated On :17 ஜூன் 2020, 10:35 am

DIN

பொன்னமராவதி:  பொன்னமராவதியை சார்ந்த கண் பார்வையற்றோர் பள்ளியில் பயிலும் பார்வைற்ற சிறுவன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தங்களது உண்டியல் சேமிப்பு தொகையின் மூலம் 1000 முகக் கவசங்கள் வாங்கி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னமராவதியை சார்ந்தவர் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பி.பாஸ்கர். இவரது மூத்த மகன் பா.தர்ஷன்(10) சென்னை லிட்டில் பிளவர் கண் பார்வையற்றோர் பள்ளியில் படித்து வருகிறார். தர்ஷன் தனது மருத்துவ மற்றும் கல்வி செலவுகளுக்காக உண்டியலில் ரூ.5000 சேமித்து வைத்துள்ளார். இவர் இத்தொகையுடன் சகோதரர் பா.பிரணவ் (9) உண்டியலில் சேர்த்து வைத்திருந்த சேமிப்பு தொகை ரூ. 2000 என மொத்தம் ரூ.7 ஆயிரத்துக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 1000 முகக் கவசங்கள் வாங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரியிடம் வழங்கியுள்ளார். 

மருத்துவ செலவிற்காக வைத்திருந்த தொகையை பார்வையற்ற சிறுவன் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் முகக் கவசங்கள் வாங்கி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் தர்ஷனின் தாயார் ரேவதி பொது முடக்க காலத்தில் தொடர்ந்து 51 நாள்கள் ஆதரவற்ற ஏழை மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.