தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தஞ்சாவூர் அருகே வீடு புகுந்து நகைகள், வாகனம் திருட்டு

தஞ்சாவூர் அருகே வீடு புகுந்து நகைகள், செல்லிடப்பேசிகள், வாகனத்தைத் திருடிச் சென்ற மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

News image
Updated On :18 ஜூன் 2020, 6:23 am

DIN


தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வீடு புகுந்து நகைகள், செல்லிடப்பேசிகள், வாகனத்தைத் திருடிச் சென்ற மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாதாகோட்டை சாலை சுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (53). இவர் புதன்கிழமை இரவு வெப்பம் காரணமாக மாடியில் படுக்கச் சென்றார். வீட்டில் இவரது மனைவி, இரு மகன்கள், மகள் படுத்து தூங்கினர்.

வியாழக்கிழமை அதிகாலையில் எழுந்த தேவேந்திரன் மாடியிலிருந்து இறங்கி வீட்டுக்கு வந்தார். அப்போது முன்பக்கக் கதவு திறந்து கிடந்ததுடன், 5 பவுன் தங்கச் சங்கிலி, அரை பவுன் ஜிமிக்கி, 2 செல்லிடப்பேசிகள், வீட்டு வளாகத்தில் இருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.