கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டையில் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கண்ணன்கோட்டை நீர்தேக்க திட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன், பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்தையா நேரில் ஆய்வு செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை ஈசா ராஜன் ஏரியோடு, தேர்வாய் ஏரியை இணைந்து நீர்தேக்கம் அமைத்து கிருஷ்ணா கால்வாய் மூலம் சென்னைக்கு 1 டி.எம்.சி தண்ணீர் கொண்டு செல்ல தமிழக அரசு 2011 -ஆம் திட்டம் அமைத்து செயல்படுத்த துவங்கியது.
இந்த திட்டத்திற்காக 800 ஏக்கர் பட்டா நிலம், 200 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அரசு நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கு 1 மடங்கு இழப்பீட்டை அறிவித்தது.
விவசாயிகள் நீதிமன்றத்தை அணுகிய நிலையில் உச்சநீதி மன்றம் சந்தை மதிப்பில் 4 மடங்கு இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு அறிவித்தது. ஆனால் தமிழக அரசு, அரசு மதிப்பீட்டில் 2.4 மடங்கு இழப்பீட்டை வழங்கியது.
இந்நிலையில், மீதம் உள்ள 1.6 மடங்கு இழப்பீட்டு தொகை மற்றும் அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகைக்கு 2013 -ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை 589 விவசாயிகளுக்கு தர வேண்டிய வட்டி தொகையான 38.5 கோடியை வழங்க கோரி விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு, மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு விரைந்து பாக்கி தொகையை வழங்க அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக நீர்தேக்க திட்டபணிகள் வேமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் பருவமழை துவங்க உள்ள நிலையில் நீர்தேக்க திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
தொடர்ந்து தமிழக முதல்வரால் இந்த நீர்தேக்க திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ள நிலையில் கண்ணன்கோட்டை நீர்தேக்கத்தை பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளான முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன், பாலாறு வடிநில வட்ட கண்ககாணிப்பு பொறியாளர் முத்தையா நேரில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி கண்ணண்கோட்டை நீர்தேக்க திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள கால்வாய்கள், நீர் தேக்க பகுதி, கரைகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.
நிகழ்வில் உதவி பொறியாளர்கள் தனசேகர், பத்மநாபன், சுந்தரம், பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
இதன்மூலம் கண்ணன்கோட்டை நீர்தேக்கத்தில் இருந்து சென்னைக்கு 1 டிஎம்சி தண்ணீர் விரைவில் கிடைக்கப்பட உள்ளது.
மேலும் நிகழ்வின் பொது கண்ணன்கோட்டை பகுதி மக்கள் நிலுவை தொகை குறித்து கேட்டபோது விரைந்து வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!

ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸி. கிரிக்கெட் வீரர்!

அதீத பேட்டரி திறன்... இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


