உலகளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 89 லட்சத்து 22 ஆயிரத்து 027-க்கு அதிகமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 66 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹானில் கண்டறியப்பட்ட கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை வரையில் புதிதாக 13,573 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்தை அடுத்து தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 89,22,027 ஆகவும், புதிதாக 601 பேர் பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,66,867 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 47,43,532 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 36,57,123 பேர்களில் 54,505 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
அமெரிக்காவில் அதிகபட்சமாக 23,30,578 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,21,980 பேர் பலியாகியுள்ளனர். 972,941 குணமடைந்துள்ளனர், தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 12,35,657 பேர்களில் 16,529 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 10,70,139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 50,058 இறப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் 5,76,952 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 3,95,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 13,281 பேர் பலியாகியுள்ளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!

அடுத்து என்ன? பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் தனிக் கவனம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


