கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேனி அருகே விபத்தில் 2 பேர் பலி: பொதுமக்கள் சாலை மறியல்

தர்மாபுரியில் அரசு மதுக்கடையை  மூட வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image
Updated On :22 ஜூன் 2020, 5:33 am

DIN

தர்மாபுரியில் அரசு மதுக்கடையை  மூட வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி அருகே தர்மாபுரியைச் சேர்ந்தவர் மலைச்சாமி(40). கோட்டூரைச் சேர்ந்தவர் மார்ட்டின்(20). இவர்கள், தர்மாபுரியில் பூமலைக்குண்டு-மல்லையகவுண்டன்பட்டி சாலையில் உள்ள அரசு மதுக் கடைக்கு தனித் தனியே இருசக்கர வாகனங்களில் வந்துள்ளனர்.

மதுக் கடையிலிருந்து திரும்பும் போது, இவர்களது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில், படுகாயமடைந்த 2 பேரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து, தர்மாபுரியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாக உள்ள அரசு மதுக் கடையை மூட வலியுறுத்தி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.