மதுரையில் மீண்டும் பொது முடக்கம்? கடைகள் செயல்படும் நேரத்தை குறைத்து வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு
மதுரை மாவட்டத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.


மதுரை மாவட்டத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
சென்னையைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்திலும் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களாக பாதிப்பு உறுதி செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை முந்தைய தினங்களைக்காட்டிலும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் பொது முடக்கத்தை மேலும் அமல்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. ஜூன் 24 முதல் 30 தேதி வரை பொது முடக்கத்தை அமல்படுத்த அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக மதுரையை அடுத்த பரவையில் செயல்பட்ட மொத்த காய்கறி சந்தை மூடப்பட்டுவிட்டது. மாட்டுத்தாவணி மத்திய காய்கறி சந்தையில் செயல்பட்ட கடைகள் 3 வெவ்வேறு இடங்களுக்கு நகர்வு செய்யப்பட்டுள்ளன. மேலூர் காய்கனி சந்தை மூடப்பட்டுள்ளது. திருமங்கலத்தில் கடைகள் செயல்படும் நேரத்தை வணிகர்கள் குறைத்துவிட்டனர். இதன் தொடர்ச்சியாக மதுரை உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் தங்களது கடைகளின் வேலை நேரத்தை குறைத்து அறிவித்துள்ளனர்.
மதுரை கீழமாசி வீதி மற்றும் வெளி வீதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லறையில் வியாபாரம் செய்யும் மளிகை கடைகள் செயல்பட்டு வருகின்றன. மதுரை மட்டுமின்றி தென்மாவட்டங்கள் பலவற்றுக்கும் அங்கிருந்து தான் மளிகைப் பொருள்கள் செல்கின்றன. இந்த கடைகளுக்கு தற்போது காலை 6 முதல் இரவு 9 மணி வரை விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 24 முதல் 30 ஆம் தேதி வரை காலை 6 முதல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்பி ஜெயப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
மேலும் இரவு 10 முதல் காலை 6 மணி வரை இந்த கடைகளுக்கு லாரிகளில் சரக்குகள் ஏற்றி இறக்க அனுமதிக்க வேண்டும் எனவும் காலை 6 முதல் பகல் 2 மணி வரை டிரை சைக்கிள் மற்றும குட்டியானை போன்ற சிறிய சரக்கு வாகனங்களை அனுமதிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...