
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மாற்றத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணக்குமார் மாற்றப்பட்டு அவருக்கு பதில் ஆஷிஷ் அஜித் என்ற ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் சரவணக்குமார் மாற்றப்பட்டதை கண்டித்தும் தொடர்ந்து அவரே ஆணையராக மீண்டும் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்துக்குள் தூய்மைப் பணியாளர்கள் செவ்வாய்கிழமை காலை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் ஆணையருக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர். இதனால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.