கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

வால்பாறை: கோட்டூர் காவல் நிலையம் சீல் வைப்பு

வால்பாறை உட் கோட்டத்திற்கு உட்பட்டது கோட்டூர் காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தில் 40க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

News image
Updated On :24 ஜூன் 2020, 8:16 am


பொள்ளாச்சி: வால்பாறை உட் கோட்டத்திற்கு உட்பட்டது கோட்டூர் காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தில் 40க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்நிலையில், பெண் காவலர் ஒருவருக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் தொந்தரவு இருந்ததால் அவருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து புதன்கிழமை பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், கோட்டூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜா, வட்டாட்சியர் வெங்கடாச்சலம், வால்பாறை டிஎஸ்பி விவேகானந்தன், ஆனைமலை காவல் ஆய்வாளர் சுப்பிரமணி ஆகியோர் கோட்டூர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்து கிருமிநாசினிகள் தெளித்து சீல் வைத்தனர். அங்கு பணிபுரியும் 40 காவலர்களும் கரோனா பரிசோதனை செய்யவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.