/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 வயது சிறுமி உள்பட 14 பேருக்கு கரோனா தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 வயது சிறுமி உட்பட 14 பேருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2024, 4:50 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 வயது சிறுமி உட்பட 14 பேருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 13 பேர் ஓசூர் பகுதியையும் ஒருவர் கிருஷ்ணகிரியையும் சேர்ந்தவர்கள்.

இவர்கள் தமிழ்நாட்டில் தர்மபுரி, தூத்துக்குடி, வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தவர்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை மொத்த  85 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 32 பேர் சிகிச்சைக்குப்பின்  குணமடைந்துள்ளனர். 

தற்போது மருத்துவமனைகளில் 57 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.