மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

கடையத்தில் பாரதியார் - செல்லம்மாள் 123 ஆவது திருமண நாள் விழா

பாரதி செல்லம்மாவின் ஊரான கடையத்தில் சேவாலயா சார்பில் பாரதியார் - செல்லம்மா ஆகியோரின் 123ஆவது திருமண நாள் விழா சனிக்கிழமைக் கொண்டாடப்பட்டது.

News image

பாரதியார் - செல்லம்மாள் 123 ஆவது திருமண நாள் விழாவில் நிவாரணப் பொருள் வழங்குகிறார் காவல் உதவி ஆய்வாளர் காஜா முகைதீன்

Updated On :27 ஜூன் 2020, 12:58 pm IST

பாரதி செல்லம்மாவின் ஊரான கடையத்தில் சேவாலயா சார்பில் பாரதியார் - செல்லம்மா ஆகியோரின் 123ஆவது திருமண நாள் விழா சனிக்கிழமைக் கொண்டாடப்பட்டது.

கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளியில் கரோனா பொது முடக்க விதிமுறைகளான, முகக் கவசம் அணிவது, கைகளை கிருமி நாசினிக் கொண்டு கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 பேருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. 

முன்னதாக காணொளி காட்சி மூலம் எழுத்தாளர் இசைக்கவி ரமணன், பாரதி செல்லம்மாளின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சேவாலயா நிறுவனர் முரளி காணொளிக் காட்சிகளை நெறிப்படுத்தினார். 

திருமண நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியை மீரா, கடையம் காவல் உதவி ஆய்வாளர் காஜாமுகைதீன், தலைமை ஆசிரியர் (ஓய்வு) கல்யாணி சிவகாமி நாதன், கோபால், செயல் அலுவலர் (ஓய்வு) அருணாசலம், தொழிலதிபர் சண்முகவேல், தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.