பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கனிமொழி வாழ்த்து

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி தனது டிவிட்டர் பக்க பதிவில்
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கனிமொழி வாழ்த்து

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி தனது டிவிட்டர் பக்க பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 2 முதல் மாா்ச் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை தமிழகம், புதுச்சேரியில் 7,276 பள்ளிகளைச் சோ்ந்த 8 லட்சத்து 16,359 மாணவா்கள் மற்றும் 19,166 தனித்தோ்வா்கள் என மொத்தம் 8 லட்சத்து 35,525 போ் எழுத உள்ளனா். இவா்களில் 4 லட்சத்து 41,612 மாணவிகள், 3 லட்சத்து 74,747 மாணவா்கள், 2 திருநங்கைகள், 62 சிறைக் கைதிகள் அடங்குவா்.

புதிய பாடத்திட்டத்தில் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு மாணவா்கள் தோ்வு எழுதுகின்றனர். முதல் நாளான இன்றைய தேர்வில் மொழிப்பாடத் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திங்கள்கிழமை தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நாளைய உலகை கட்டமைக்க இருக்கும் மாணவ, மாணவிகள் நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com