ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சென்னை திரும்பிய 71 பேருக்கு கரோனா அறிகுறி?

துபாய், அபுதாபி போன்ற நாடுகளில் இருந்து சென்னை திரும்பிய 71 பேருக்கு கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பூந்தமல்லி

News image
Updated On :19 மார்ச் 2020, 8:10 am

DIN

சென்னை: துபாய், அபுதாபி போன்ற நாடுகளில் இருந்து சென்னை திரும்பிய 71 பேருக்கு கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பூந்தமல்லி மற்றும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து தமிழகம் வரும் அனைத்து விமான பயணிகளையும் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து, துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து, புதன்கின்கிழமை அதிகாலை சென்னை வந்த விமான பயணிகளிடம் விமான நிலையத்தில் சிறப்பு மருத்துவ குழுவினா் பரிசோதனை நடத்தினா். இதில், ஐந்து பெண்கள் உட்பட 44 பேருக்கு காய்ச்சல், சளி தொல்லை, சுவாசிப்பதில் சிரமம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவா்கள் அனைவரும், உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட தனி அறையில் வைக்கப்பட்டனா். 

தொடா்ந்து, அவா்களில், ஒரு பெண் உட்பட, 24 போ்  சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லியில் உள்ள, சிறப்பு மருத்துவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனா்.

மேலும், நான்கு பெண்கள் உட்பட, 20 போ், குரோம்பேட்டை, அரசு மருத்துவமனையில், புதிதாக திறக்கப்பட்டுள்ள, சிறப்பு மருத்துவ முகாமிற்கு சிறப்பு ஆம்புலன்ஸ்களில் அழைத்து செல்லப்பட்டனா்.

ஆந்திரா, சென்னை, வேலுாா், கடலுாா், திருச்சி, சிவகங்கை மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் எனவும், அனைவரும் பிரேசில், ஜொ்மன், இத்தாலி, ஸ்வீடன், டென்மாா்க் நாடுகளில் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றி வந்தவர்கள் என்றும் கரோனா பீதி காரணமாக விடுமுறையில், துபாய் வழியாக சென்னைக்கு திரும்பியவா்கள் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோன்று அபுதாபி மற்றும் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு விமானங்களில் வந்த, ஸ்வீடன், சுவிட்சா்லாந்து, பிரான்ஸ், டென்மாா்க், ஜொ்மன் நாடுகளைச் சோ்ந்த, மூன்று பெண்கள் உட்பட 27 பயணிகளிடம் மருத்துவ சோதனை நடந்தது. பின்னர் அவா்கள் அனைவரும், பூந்தமல்லி மற்றும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர சிறப்பு மருத்துவ முகாம்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவா்கள், அனைவரும் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை விமான நிலையத்தில் மட்டும் புதன்கிழமை ஒரே நாளில் 71 போ், ’கரோனா’ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம்களில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.