கரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல் அறிய சிறப்பு இணையதளம்
கரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழக அரசு சிறப்பு இணையதளம் ஒன்றை உருவாகியுள்ளது.


கரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழக அரசு சிறப்பு இணையதளம் ஒன்றை உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாவது:
கரோனா வைரஸ் தொற்றை விரட்டி அடிக்கும் முயற்சியாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்களுக்கான அத்தியவாசியான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்திலும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
வரைஸ் தொற்று அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்று தகவல்களை மக்கள் அறிய தமிழக அரசு சிறப்பு இணைய தளம் ஒன்றை உருவாகியுள்ளது. www.stopcoronatn.in என்ற இணையதளத்தில் கரோனா குறித்த தகவலும் மற்றும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...