டிரம்ப் தெரிவித்த கருத்தில் உண்மையில்லை: மத்திய அரசு 

பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் பேசியதாகவும், "சீனாவில் என்ன நடக்கிறது. எல்லைப் பிரச்னை விவகாரத்தில் சீனா மீது பிரதமர்
டிரம்ப் தெரிவித்த கருத்தில் உண்மையில்லை: மத்திய அரசு 


புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் பேசியதாகவும், "சீனாவில் என்ன நடக்கிறது. எல்லைப் பிரச்னை விவகாரத்தில் சீனா மீது பிரதமர் நரேந்திர மோடி நல்ல மனநிலையில் இல்லை" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்தில் உண்மையில்லை என்றும், "பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே அண்மையில் எந்த தொடர்பும் இல்லை. அவர்களுக்கு இடையே கடைசியாக ஏப்ரல் 4 ஆம் தேதி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் வாங்குவதற்காக பேசியதுதான்" என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த சில நாள்களில் லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் 5,000-க்கும் மேற்பட்ட வீரா்களை குவித்துள்ளது. அவா்கள் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனா். சில இடங்களில் சாலைகள், பதுங்கு குழிகள் அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவதுடன், போா் பயிற்சியில் ஈடுபடுவதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் லடாக் எல்லையில் வீரா்களை நிறுத்தியுள்ளது. இதனால் லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

சீன ராணுவம் எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடக் கூடாது என்ற இந்தியாவின் வலியுறுத்தலை சீனா ஏற்கவில்லை. அதே நேரத்தில், இந்திய எல்லைக்குள் ராணுவம் மேற்கொண்டு வரும் பாலம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் எல்லையில் நிலவி வரும் பிரச்னைகளை அமைதியான முறையில் தீா்க்க சீனாவுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மத்தியஸ்த முயற்சி செய்வதாக கூறிய டிரம்ப், இது தொடா்பாக இந்தியாவை அணுகினாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவா் மறுத்துவிட்டாா் வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா.

இதனிடையே இந்தியா - சீனா இடையே மிகப்பெரிய மோதல் நிலவுகிறது. இருந நாடுகளிடமும் வலிமையான ராணுவ பலம் உள்ளது. ஆனால் எல்லை விவகாரத்தில் சீனா நடவடிக்கையில் இந்தியாவுக்கு மகிழச்சி இல்லை. நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினேன். "சீனாவில் என்ன நடக்கிறது. எல்லைப் பிரச்னை விவகாரத்தில் சீனா மீது பிரதமர் நரேந்திர மோடி நல்ல மனநிலையில் இல்லை" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், எல்லைப் பிரச்னை விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்த கருத்தில் உண்மையில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் அமெரிக்க அதிரம் டிரம்ப் - பிரதமர் மோடியும் கடந்த ஏப்ரல் மாதத்தொடக்கத்துக்கு பின்பு இருவரும் தொலைப்பேசி மூலம் பேசிக்கொள்ளாத நிலையில் டிரம்ப் எப்படி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் என கேள்வி எழுப்பியுள்ளது. 

அதாவது "பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே அண்மையில் எந்த தொடர்பும் இல்லை. அவர்களுக்கு இடையே கடைசியாக ஏப்ரல் 4 ஆம் தேதி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் வாங்குவதற்காக பேசியதுதான்" இந்த உரையாடலுக்குப்பின் இருவரும் தொலைப்பேசிக்கொள்ளாத நிலையில் டிரம்ப்  இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது. 

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் தெரிவித்தபோதும் இந்தியா உறுதியாக நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com