பள்ளிகள் திறப்பு : நவ.9-ம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என புதன்கிழமை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தியில்,
தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 16ஆம் தேதி 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும்.
இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். நேரில் வர முடியாதவர்கள் கடிதம் மூலம் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.
கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்குமுன், நவம்பர் 16ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கலாம் என அக்டோபர் 31ஆம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...