கிராம சபைக் கூட்டம் ரத்து: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
அக்டோபர் 2 ஆம் தேதி தமிழகத்தில் கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


அக்டோபர் 2 ஆம் தேதி தமிழகத்தில் கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டங்களை கரோனா பரவல் காரணமாக தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பதை குறிப்பிட்டு தமிழக அரசு ரத்து செய்தது.
இதையடுத்து தமிழகத்தில் கிராம சபைக் கூட்டங்களை நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவின் மூத்த தலைவர் கே.என்.நேரு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில்,
தனிமனித இடைவெளி காரணமாக கிராம சபைக் கூட்டம் ரத்து என்றால் டாஸ்மாகில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படுகிறதா?, குறிப்பிட்ட விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என கூற அரசுக்கு எங்கே அதிகாரம் உள்ளது? என கேள்விகள் எழுப்பினார்கள்.
மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கக் கோரி வழக்கை ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...