கிருஷ்ணகிரியில் பாஜகவினர் மறியல்:120 பேர் கைது
கிருஷ்ணகிரியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 120 பேரை காவலர்கள் கைது செய்தனர்.


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 120 பேரை காவலர்கள் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை தொடங்க இருந்த வேல் யாத்திரையை தடை செய்ததை கண்டித்து கிருஷ்ணகிரியில் பாஜக மாவட்டத் தலைவர் தர்மலிங்கம் தலைமையில் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 120 பேரை காவலர்கள் கைது செய்தனர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடவுள் மறுப்பாளர்களையும், வேல் யாத்திரைக்கு தடைவிதித்ததையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...