இந்தியாவில் கொள்ளையில் ஈடுபட்ட 24 ஈரானியர்கள்: கேரளத்தில் 4 பேர் கைது
கேரளத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 ஈரான் நாட்டினர்களை புதன்கிழமை காவல்துறையினர் கைது செய்துள்ளனார்.


கேரளத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 ஈரான் நாட்டினர்களை புதன்கிழமை காவல்துறையினர் கைது செய்துள்ளனார்.
இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட செய்தியில்,
திருப்புநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஈரான் நாட்டினர்கள் காலாவதியான விசா வைத்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலையடுத்து வந்த காவல்துறையினர், தாவூத், மொஹ்சின், மஜீத் மற்றும் ஐனோலா ஆகிய 4 ஈரான் நாட்டினரிடமும் ஏதேனும் குற்றவியல் வழக்கில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் 4 பேரும் ஆலப்புழாவில் உள்ள செர்தலா பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றில் கொள்ளையடித்தது தெரியவந்தது.
கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஈரான் நாட்டில் இருந்து 24 பேர் கொண்ட குழு தில்லியில் மூகாமிட்டதாகவும், நாடு முழுவதும் பிரிந்து சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது.” என காவல்துறை தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...