/

ஆந்திரத்தில் 1,728, கர்நாடகத்தில் 2,116 பேருக்கு கரோனா

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :12 நவம்பர் 2020, 2:48 pm

ANI

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.

ஆந்திரம்:

ஆந்திரத்தில் புதிதாக 1,728 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு 8,49,705 ஆக உயர்ந்துள்ளது. இதில் 20,857 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 8,22,011 பேர் குணமடைந்துள்ளனர், 6,837 பேர் பலியாகியுள்ளனர்.

கர்நாடகம்:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,116 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 21 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை மொத்தம் 8,55,912 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,14,949 பேர் குணமடைந்துள்ளனர், 11,474 பேர் பலியாகியுள்ளனர். 29,470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.