தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இருசக்கர வாகனம் மீது வேன் மோதி இளைஞர் பலி

கொடுமுடி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். பெண்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.

News image
விபத்தில் உயிரிழந்த இளைஞர் மற்றும் காயமடைந்த பெண்கள்
Updated On :23 நவம்பர் 2020, 3:37 pm

DIN

ஈரோடு: கொடுமுடி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். பெண்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.

ஈரோடு திருநகர் காலனி, ராமமூர்த்தி நகரை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் விக்னேஸ்வரன்(29). எல். ஐ.சி. முகவர்.  இவர் மனைவி துர்கா(25), துர்காவின் தங்கை ஸ்ருதி(23) ஆகியோருடன் திங்கள்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் கொடுமுடி அருகே வெங்கம்பூரில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது மலையம்பாளையம் காவல் நிலையம் அருகே வளைவில் திரும்பும்போது எதிரில் கரூர் நோக்கி சென்ற வேன் மோதியது. இதில் விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  துர்கா, ஸ்ருதி இருவரும் படுகாயம் அடைந்தனர்.  

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர்,  விக்னேஸ்வரன் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். படுகாயம் அடைந்த இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மலையம்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.