ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அரசு, தனியார் மருத்துவமனைகள் முழுமையாக செயல்படும்: கடலூர் ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகள் முழுமையாக செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :24 நவம்பர் 2020, 12:54 pm

DIN

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகள் முழுமையாக செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதன்பின்னர் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி செய்தியாளர்களிடம் கூறுகையில், புயலை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் தலா ஒரு மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் மருத்துவர்கள், செவிலியர்களுடன் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைப்போல் தனியார் மருத்துவமனைகளிலும் முழுமையாக மருத்துவர்கள், செவிலியர்களுடன் இயங்க வேண்டுமென அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடலோர வட்டாரங்களில் கூடுதலாக ஒரு மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்படுமென கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை கேட்டுப்பெறலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.