தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி கிராம சபை கூட்டம்

ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி தி.மு.க. தலைமையில் கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
Updated On :2 அக்டோபர் 2020, 10:23 am

DIN

ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி தி.மு.க. தலைமையில் கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மரக்குளம் ஊராட்சியில் ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி வாசுதேவன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

இதில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விவசாய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் ஊராட்சிகளுக்கு கடந்த 10 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஊராட்சிகளில் நடைபெறும் டெண்டர் பேக்கேஜ் முறையை கைவிட வேண்டும். 2018 -19 ஆண்டுகளுக்கான பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.