போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பஞ்சாபில் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கூலித்தொழிலாளி தற்கொலை

பஞ்சாபில் கூலித்தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்வதற்கு முன் தனது 3 குழந்தைகளை கொலை செய்ததாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

News image

கோப்புப்படம்

Updated On :8 அக்டோபர் 2020, 9:47 am

PTI

பஞ்சாபில் கூலித்தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்வதற்கு முன் தனது 3 குழந்தைகளை கொலை செய்ததாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

பதிந்தா மாவட்டம் ஹமீர்கர் கிராமத்தில் வசிப்பவர் பீந்த் சிங் (வயது 35). இவர் கூலித்தொழில் செய்து வந்தார். இவரது மனைவி லவ்பிரீத் கவுர். இவர்களுக்கு பிரஜ்ஜோத் சிங் (7), அர்ஷ்தீப் கவுர் (3) மற்றும் குஷி (1) என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் லவ்பிரீத் புற்றுநோயால் பலியானார். இதையடுத்து, மனமுடைந்த நிலையில் இருந்த பீந்த் புதன்கிழமை இரவு தனது 3 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதி வைத்த தற்கொலை குறிப்பை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல் கண்காணிப்பாளர் ஜஸ்பீர் சிங் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.