உ.பி.யில் உறவினரால் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
உத்தரபிரதேசத்தில் 11 வயது சிறுமியை உறவினர் உள்பட இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.


உத்தரபிரதேசத்தில் 11 வயது சிறுமியை உறவினர் உள்பட இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து அமேதி காவல் கண்காணிப்பாளர் தினேஷ் சிங் கூறுகையில்,
அமேதி மாவட்டத்தில் முசாஃபிர்கானா கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் சிறுமி ஒருவர் வெள்ளிக்கிழமை டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
அப்போது சிறுமியின் மாமா உள்பட இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அச்சுறுத்தியதால் 3 நாள்கள் தாமதமாக திங்கள்கிழமை மாலை சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் பாலியல் வன்கொடுமை சார்ந்த வழக்குகள் பதிந்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...