பஞ்சாப் ஆளுநரிடம் விவசாய சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை அளித்தார் முதல்வர்

பஞ்சாப் சட்டப் பேரவையில் விவசாய சட்டங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநரிடம் முதல்வர் அமரீந்தர் சிங் செவ்வாய்க்கிழமை அளித்தார்.
சட்டப் பேரவையில் பேசிய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
சட்டப் பேரவையில் பேசிய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

பஞ்சாப் சட்டப் பேரவையில் விவசாய சட்டங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநரிடம் முதல்வர் அமரீந்தர் சிங் செவ்வாய்க்கிழமை அளித்தார்.

ஆளுநரை சந்தித்த பிறகு பேசிய முதல்வர்,

பஞ்சாப் சட்டப் பேரைவையில் விவசாய சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளோம். அந்த தீர்மானத்தின் நகலை சட்டப் பேரவை உறுப்பினர்களுடன் சென்று ஆளுநரிடம் அளித்துள்ளோம்.

அந்த தீர்மானத்தை ஒப்புக் கொள்ளுமாறு கேட்டுள்ளோம். ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதால் ஆளுநர் இதை ஏற்றுக் கொள்ளுவார் என நம்புகிறேன். அதன் பிறகு தீர்மானத்தை ஜனாதிபதிக்கு ஆளுநரால் அனுப்பப்படும். இருப்பினும், ஜனாதிபதியை நேரில் சந்திக்க நவம்பர் 2 முதல் 5 ஆம் தேதிக்குள் நேரம் கோரியுள்ளேன் என தெரிவித்தார். 

இதற்குமுன் விவசாய சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தின் போது சட்டப் பேரவையில் பேசிய முதல்வர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவோ அல்லது ஆட்சிக் கலைந்துவிடும் என்றோ நான் பயப்படவில்லை, விவசாயிகளின் நலனுக்காக அதையும் எதிர் கொள்ள தயாராக உள்ளேன். 

பஞ்சாபில் 1980 மற்றும் 90 களில் இருந்தது போல் போராட்டம் வலுபெற்று உள்ளது. விவசாயிகளுடன் இளைஞர்களும் கைக்கோர்த்தால் நிலைமை மோசமடையும் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com