வடமேற்கு பாகிஸ்தானில் மழையால் 10 பேர் பலி
வடமேற்கு பாகிஸ்தானில் பெய்து வரும் மழையால் 10 பேர் உயிரிழந்துள்ளனர், 20 பேர் காயமடைந்துள்ளனர் என புதன்கிழமை பேரிடர் மேலாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.


வடமேற்கு பாகிஸ்தானில் பெய்து வரும் மழையால் 10 பேர் உயிரிழந்துள்ளனர், 20 பேர் காயமடைந்துள்ளனர் என புதன்கிழமை பேரிடர் மேலாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேரிடர் மேலாண்மை அதிகாரி கூறுகையில்,
ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை பேரிடர் மேலாண்மைக் குழுவினர்கள் வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர்.
வெள்ளத்தால் இதுவரை ஸ்வாட் ஆற்றில் மூழ்கி 3 பேர் பலியாகியுள்ளனர், அதில் ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 2 பேரின் உடலைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
பாலகோட் பகுதியில் வெள்ளத்தில் 3 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். மேலும், மன்சேராவின் ஓகி பகுதியில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், கைபர் பக்துன்க்வாவில் மழை தொடர்பான சம்பவங்களில் 4 பேர் பலியாகினர், 20 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 46 வீடுகள் சேதமடைந்துள்ளது என பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...