தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முதுகுளத்தூர்: தமுமுக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி முதுகுளத்தூர் நகரில் மாவட்டத் தலைவர் முகம்மது இக்பால் தலைமையில் நடைபெற்றது.

News image
முதுகுளத்தூர் சார்பு ஆய்வாளர் சக்திவேல் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்
Updated On :3 செப்டம்பர் 2020, 11:57 am

DIN

ராமநாதபுரம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி முதுகுளத்தூர் நகரில் மாவட்டத் தலைவர் முகம்மது இக்பால் தலைமையில் நடைபெற்றது.

தமுமுக மாவட்ட செயலாளர் முகம்மது முஹிதுல்லா, மாவட்ட பொருளாளர் வாவா ராவுத்தர், மாவட்ட துணை நிர்வாகிகள் சல்மான், சகாபுதீன், காதர்மைதீன், சிந்தா ஷேக், ரோஸ் காதர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் ஜபருல்லாகான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

முதல் நிகழ்வாக முதுகுளத்தூர் நகரில் 2 இடத்தில் 25 அடி உயர கொடி கம்பத்தில் தமுமுக கொடி ஏற்றப்பட்டது. இரண்டாவது நிகழ்வாக மரக்கன்று நடப்பட்டது. இந்நிகழ்ச்சியை முதுகுளத்தூர் சார்பு ஆய்வாளர் சக்திவேல் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.

மூன்றாவது நிகழ்வாக மாற்றுத் திறனாளி பள்ளி மற்றும் பசும் குடில் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. நான்காவது நிகழ்வாக கால்பந்து போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர நிர்வாகிகள் இஸ்மாயில், ராஜா, காதர், சகுபர் சாதிக், தமிம், ஷேக், பீர் நவாஸ்கான், சாலிஹ், ஜலால் காதரி, அகமது, ஹனிபா, சீனி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.