சிறுவனைக் கடந்த ஒரு மாதத்தில் 8 முறை கடித்த பாம்பு
உத்தரபிரதேசத்தில் ஒரு சிறுவனைக் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எட்டு முறை ஒரே பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.


உத்தரபிரதேசத்தில் ஒரு சிறுவனைக் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எட்டு முறை ஒரே பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் யஷ்ராஜ் மிஸ்ரா (வயது 17). இந்தச் சிறுவன் பாம்பு கடித்ததற்காக பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சிறுவனைக் கடைசியாக கடந்த வாரம் பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர், மேலும் சிறுவனின் குடும்பத்தினர் மாற்று வழியாக மந்திரம் போன்ற முறையை அனுக உள்ளதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், எனது மகனை தொடர்ந்து ஒரே பாம்பு கடித்து வருகிறது. அவனை மூன்றாவது முறையாக பாம்பு கடித்தபோது, பகதூர்பூர் கிராமத்தில் உள்ள எனது உறவினர் ராம்ஜி சுக்லாவின் வீட்டிற்கு அனுப்பினேன்.
ஆனால் சில நாள்களில் எனது மகனை அதே பாம்பு உறவினர் வீட்டின் முன்பும் கடித்தது. இதையடுத்து யஷ்ராஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்த பாம்பு ஏன் யஷ்ராஜை தொடர்ந்து குறிவைக்கிறது என்பதை எங்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. சிறுவன் இப்போது மனநலம் பாதிக்கப்பட்டு பாம்பின் தொடர்ச்சியான பயத்தில் வாழ்கிறான்.
இதற்கு முன் பூஜைகள் மற்றும் சடங்குகள் பல முறை செய்துள்ளோம், ஆனால் எந்தப் பயனும் இல்லை. பின், பாம்பைப் பிடிக்க பாம்பு மந்திரவாதிகளையும் அழைத்தோம், அதுவும் பயனளிக்கவில்லை என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...