சேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

ஒடிசாவில் 5 ஆவது அமைச்சருக்கு கரோனா உறுதி

ஒடிசாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் துகுனி சாஹுவுக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியாகியுள்ளது.

News image

ஒடிசாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் துகுனி சாஹு

Updated On :11 செப்டம்பர் 2020, 3:44 pm

PTI

ஒடிசாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் துகுனி சாஹுவுக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து சாஹு சுட்டரில் கூறுகையில், கரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது. கடந்த சில நாள்களாக என்னுடம் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு கூறினார்.

அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்படும் 5 ஆவது அமைச்சர் சாஹு என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சுசாந்த் சிங், உயர்கல்வித்துறை அமைச்சர் அருண்குமார் சாஹூ, ஜவுளித்துறை அமைச்சர் பத்மினி தியான் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜே.பி.பனிகிராஹி ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, ஒடிசா மாநிலத்தில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 17 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.