சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் உள்ள பெரும்பாலான அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை உணவாக இட்லி, பொங்கல் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பொங்கல் மட்டுமே கிடைப்பதாகவும், அதுவும், முன்பைவிட குறைவாகவே வழங்கப்படுவதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாலையில், சப்பாத்தி வைக்கப்பட்டிருந்த நிலை மாறி, தற்போது சப்பாத்தியும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
காலை மற்றும் மாலை மட்டுமல்லாமல், மதியத்துக்கு பல வகையான சாப்பாடுகள் வழங்கப்பட்டு வந்தது. அதுவும் குறைக்கப்பட்டுள்ளதாம். இரவில் சப்பாத்திக்கு பதில் தக்காளி சாதம் மட்டுமே வழங்கப்படுகிறது என மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இது குறித்து அம்மா உணவக ஊழியர்களோ, ஒரு வாரத்துக்கு ஐந்து சிலிண்டர்கள் செலவாகும். ஆனால், தற்போது மூன்று நாள்களுக்கு ஒரு சிலிண்டர் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மெனுவிலிருந்து உணவுப் பொருள்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்கிறார்கள்.
ஒரு சில அம்மா உணவகங்களில் நாள்தோறும் 600 இட்லி வரை தயாரிக்கப்படுமாம். தற்போது அது பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதாம். சில இடங்களில் இட்லி குறைவாக தயாரிப்பதால் மக்கள் வாக்குவாதம் செய்கிறார்கள் என்பதால்தான் இட்லி முழுமையாக நிறுத்தப்பட்டு பொங்கல் மட்டும் வழங்கப்படுகிறது என்கிறார்கள்.
சாம்பார் சாதமும், தயிர் சாதமும் மதிய நேரத்தில் வழங்கப்படுகிறது. கூடுதலாக கொடுத்து வந்த சாதங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளி சத்துணவு மையங்களுக்கு சிலிண்டர்கள் கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுத்து வருவதாகவும், தேர்வுகள் முடிந்து பள்ளிகள் மூடப்பட்டதும் அம்மா உணவகங்களுக்கு சிலிண்டர்களை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
Summary
It is reported that idli and chapati have been stopped at Amma restaurants due to cylinder shortage.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்மா உணவகங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்களில் விலை மேலும் அதிகரிப்பு

கோவில்பட்டியில் இளநீா் தட்டுப்பாடு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




