கிளாங்குண்டல் நல்லாசிரியருக்குப் பாராட்டு விழா
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் அருகே நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் நல்லாசிரியரைப் பாராட்டிய சிறப்பு விருந்தினர்கள்.

விழாவில் நல்லாசிரியரைப் பாராட்டிய சிறப்பு விருந்தினர்கள்.
வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் அருகே நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மூலனூர், கிளாங்குண்டல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சந்திரகாந்தி 2020 - 21 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றார்.
இதையடுத்து அவருக்கு கிளாங்குண்டல் ஊராட்சி நிர்வாகம், மாணவ, மாணவிகளின் பெற்றோர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், பென்சனர் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இவ்விழாவுக்கு ஊராட்சி தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். ஆசிரியர் மன்ற திருப்பூர் மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் தங்கவேல், மூலனூர் ஒன்றிய தலைவர் தங்கவேல், ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், விழாவில் நல்லாசிரியரின் சேவையைப் பாராட்டி, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பென்சனர் சங்க நிர்வாகிகள் தேவராஜ், மனோகரன், ரகுநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...