11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

ஆந்திரத்தில் 1,732, கர்நாடகத்தில் 2,584 பேருக்கு கரோனா

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :11 நவம்பர் 2020, 3:44 pm

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.

ஆந்திரம்:

ஆந்திரத்தில் புதிதாக 1,732 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு 8,47,977 ஆக உயர்ந்துள்ளது. இதில் 20,915 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 8,20,234 பேர் குணமடைந்துள்ளனர், 6,828 பேர் பலியாகியுள்ளனர்.

கர்நாடகம்:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,584 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 23 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை மொத்தம் 8,53,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,11,581 பேர் குணமடைந்துள்ளனர், 11,453 பேர் பலியாகியுள்ளனர். 30,743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.