நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மத்திய அரசு - விவசாயிகள் இடையே 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது

மத்திய அரசு - விவசாயிகள் இடையே 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கியது.

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜனவரி 2021, 3:10 pm IST

மத்திய அரசு - விவசாயிகள் இடையே 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கியது.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 40-வது நாளாக தில்லி எல்லைகளில் போராடி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக அடிக்கடி மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

மத்திய அரசுடன் கடந்த 30-ஆம் தேதி நடைபெற்ற 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்று 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல், சோம் பிரகாஷ் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் கோரிக்கை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கத்தினர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.