பறவைக் காய்ச்சல் பரவலையடுத்து பஞ்சாப் மாநிலத்தை கட்டுபாட்டு பகுதியாக அறிவித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹரியாணா, கேரளம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் உள்ள பறவைகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பை தடுக்கும் விதமாக, அம்மாநிலத்தை கட்டுபாட்டு பகுதியாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து பஞ்சாப் அரசு வெளியிட்ட செய்தியில்,
அண்டை மாநிலங்கள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப் மாநிலம் முழுவதையும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது.
மேலும் கோழிகள், கோழி இறைச்சி உள்ளிட்ட அனைத்தும் இறக்குமதி செய்வதற்கு ஜனவரி 15 வரை தடை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






