கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரத்தில் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்ட்வாக் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாம் அலை ஏற்பட்டிருக்கும் சூழலில், ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் நடக்கவிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கூறியதாவது,
மகாராஷ்டிரத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே மாத இறுதி வாரத்திலும், 10ஆம் வகுப்பு தேர்வுகள் ஜூன் மாதத்திலும் நடைபெறும். புதுப்பிக்கப்பட்ட அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.
மேலும், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் வாரியத்திற்கும் தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


