கரோனாவிலிருந்து மீண்டார் கேரள முதல்வர்

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தொற்றிலிருந்து மீண்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முதல்வர் பினராயி விஜயன்
முதல்வர் பினராயி விஜயன்
Updated on
1 min read

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தொற்றிலிருந்து மீண்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இன்று பினராயிக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்றிலிருந்து மீண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் விரைவில் வீட்டிற்கு திரும்புவார் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com