தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மோடி உத்தரவு

நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் மோடி ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார்.

News image

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மோடி உத்தரவு

Updated On :22 ஏப்ரல் 2021, 11:25 am

நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் மோடி ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் கரோனா பரவல் அதிகரித்தும் வரும்  நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் நீடித்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதால் மாநில அரசுகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றன. 

இந்நிலையில் தில்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் விநியோகம் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தடையின்றி ஆக்சிஜனை விநியோகம் செய்யவும், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஆக்சிஜனை மாநிலங்களுக்கு விமானம் மூலம் விரைவாக கொண்டு செல்லவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.