எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

'ஆக்சிஜன் உ.பி.க்கு திருப்பி விடப்படுகிறது': மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜனை உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு திருப்பி விடப்படுகிறது என முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

News image
மம்தா பானர்ஜி
Updated On :23 ஏப்ரல் 2021, 8:49 am

ANI

மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜனை உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு திருப்பி விடப்படுகிறது என முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

நாட்டில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா இன்று பேசுகையில்,

மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜனை உத்தரப் பிரதேசத்திற்கு திருப்பிவிடப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது.

மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டியதை திருப்பிவிட்டால் ஆக்சிஜனுக்கு நாங்கள் என்ன செய்வது? என கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.