மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

தமிழகத்தில் நாளை(ஏப்.26) முதல் வங்கி சேவை நேரம் குறைப்பு

கரோனா காரணமாக நாளைமுதல் தமிழக வங்கிகள் செயல்படும் நேரம் குறைக்கப்படுவதாக மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :25 ஏப்ரல் 2021, 5:54 am

கரோனா காரணமாக நாளைமுதல் தமிழக வங்கிகள் செயல்படும் நேரம் குறைக்கப்படுவதாக மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில வங்கியாளர்கள் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியில்,

தமிழகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால், கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாளைமுதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும்.

மேலும், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தே செயல்படலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் நாளை புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், வங்கிகள் தரப்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.