தமிழக ஆலைகளிலிருந்து வேறு மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆக்ஸிஜன் உற்பாத்தி ஆலையிலிருந்து ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் அனுப்பப்படுகிறது.
இதுகுறித்து பிரமருக்கு தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தில்,
தமிழகத்தில் 400 மெட்ரிக் டன் மட்டுமே ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் கொண்டு சென்றால், கடும் பற்றாக்குறை ஏற்படும்.
தமிழகத்திற்கு 220 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் போதுமானது என மத்திய அரசால் தவறான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைவிட குறைவாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு இங்கிருந்து ஆக்ஸிஜனை திருப்பிவிட்டால், சென்னை போன்ற நகரங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.
நாள்தோறும் தமிழகத்திற்கு 310 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில், விரைவில் 450 மெட்ரிக் டன் தேவைப்படும் நிலையில் உள்ளது.
ஆகையால் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து பிற மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ள ஆக்ஸிஜனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


